முழுமையான காப்புறுதி முறை உருவாக்கும் சீனா
2021-01-20 10:12:56

சீன மனித வளம் மற்றும் சமூகக் காப்புறுதி அமைச்சகம் அண்மையில் நடத்திய கூட்டம் ஒன்றில் 2021ஆம் ஆண்டின் முக்கியப் பணிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. சீர்திருத்தத்தை ஆழமாக்கி மேலும் முழுமையான சமூகக் காப்புறுதி முறையை உருவாக்க வேண்டுமென கூட்டத்தில் முன்மொழியப்பட்டது.

2020ஆம் ஆண்டு சீனாவின் வேலை வாய்ப்பு நிலைமை நிதானமாக இருந்தது. ஆண்டு திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. வேலை வாய்ப்பை நிலைநிறுத்தி அதிகரிப்பது இவ்வாண்டின் முக்கியப் பணியாக விளங்குகிறது. மேலும், தொழில் திறனை மேம்படுத்தும் விதமாக, பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், திறமைசாளியின் புதுமையாக்கத் திறனை ஊக்குவிக்கவும் வேண்டுமென இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.