கரோனாவினால் ஏற்படவுள்ள நீண்டகால இடர்ப்பாடு
2021-01-20 10:41:55

உலகப் பொருளாதார மன்றம் உலக இடர்ப்பாடுகள் பற்றிய 2021ஆம் ஆண்டு அறிக்கை ஒன்றை 19ஆம் நாள் வெளியிட்டுள்ளது. அதில்,  கரோனா வைரலால் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்கு உலகப் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படக் கூடும் எனவும், புவிசார் அரசியல் பதற்ற நிலை அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு தீவிரமாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 25 முதல் 29ஆம் நாள் வரை உலகப் பொருளாதார மன்றமானது, தாவோஸ் நிகழ்ச்சி நிரலை காணொலி மூலம் நடத்தி,  ஒத்துழைப்பு மூலம் கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பொருளாதார மீட்சி பெறுவது குறித்து விவாதிக்கவுள்ளது.