பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு ஊக்கம்:ஷிச்சின்பிங்
2021-01-20 15:53:58

ஜனவரி 19ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெய்ஜிங்-ஜாங்ஜியாகோ அதிவிரைவு தொடர் வண்டி மூலம், பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் நகரங்களில் ஒன்றான ஜாங்ஜியாகோவுக்குச் சென்றார். 4 ஆண்டுகளுக்கு முன், அவர் ஜாங்ஜியாகோவில் சோதனைப் பயணம் மேற்கொண்டது நினைவு கூரத்தக்கது. தவிரவும், ஒலிம்பிக் அரங்குகளுடன் நேரடியாக இணைக்கும் உலகில் முதல் அதிவிரைவு தொடர் வண்டி இதுவாகும்.

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு ஊக்கம்:ஷிச்சின்பிங்_fororder_1

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு நலன்களை வழங்கி, விளையாட்டு மற்றும் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றும். இது குறித்து ஷிச்சின்பிங் கூறுகையில், 2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளாயாட்டுப் போட்டி சிறப்பாக நடத்துவது என்பது பெய்ஜிங்-தியான்ஜின்-ஹோபெய் ஒருங்கிணைப்பு வளர்ச்சி நெருநோக்கு செயல்படுவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையும் ஆகும் என்றார். போக்குவரத்து, சுற்றுச்சூழல், தொழில் ஆகிய துறைகளின் ஒருங்கிணைப்பு வளர்ச்சியை மேம்படுத்துவதற்குப் பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். பெய்ஜிங்-தியான்ஜின்-ஹோபெய் ஒருங்கிணைப்பு வளர்ச்சி நெடுநோக்கு விரிவாக செயல்படுத்துவதில் முக்கியப் பங்காற்ற வோண்டும் என்று அவர் கூறினார்.

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு ஊக்கம்:ஷிச்சின்பிங்_fororder_3

2021ஆம் ஆண்டில் மேற்கொண்ட முதலாவது ஆய்வுப்பயணத்தில், ஷிச்சின்பிங், பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மூன்று முக்கிய இடங்களுக்குச் சென்றார். அவர் கூறுகையில், பெய்ஜிங்-தியான்ஜின்-ஹோபெய் ஒரு மலரின் பல்வேறு இதழ்கள் போன்றவை. வெவ்வேறு இதழ்கள் இருப்பினும் ஒற்றுமையுடன் இருக்கின்றன என்றார்.