பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி திட்டப்படி நடைபெறும்!
2021-02-03 19:21:55

6 ஆண்டுகளுக்கு முன்பு,  சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமஸ் பாச், 2022ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நடத்தும் உரிமை பெய்ஜிங்கிற்கு கிடைப்பதாக அறிவித்த போது,  அது  நம்பகமானவரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இன்று, பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் சுமுகமாக முன்னெடுத்து செல்லப்படுவதன் மூலம் தாமஸ் பாச்சின் கருத்து தற்போது மெய்பிக்கப்படுகிறது.

பிப்ரவரி 4ஆம் நாள் முதல் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி துவங்கும் வரை ஓராண்டுக் காலம் இருக்கும். இதற்கு முன்பே, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தாமஸ் பாச்சுடன் தொலைப்பேசியில் பேசியபோது, பல்வேறு தரப்புகளின் ஆதரவுகளுடன், சீனா திட்டப்படி பல்வகை ஏற்பாட்டுப் பணிகளை நிறைவேற்றி, முழு ஆயத்தத்துடன்  பெய்ஜி குளிர்கால ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்துவது உறதி என்று குறிப்பிட்டார்.

சீனா திட்டப்படி போட்டியை நடத்தும் என்ற நம்பிக்கைக்கு 2 ஆதாரங்கள் உள்ளன. முதலில், சீனா பயனுள்ள முறையில் கரோனா தொற்று நோயைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்து, பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுத்துள்ளது. இது, போட்டி தடையின்றி நடைபெறுவதற்கு சாதகமான சூழலை உருவாக்குகிறது. மேலும், சீனாவில் பல்வேறு ஏற்பாட்டுப் பணிகள் சுமுகமாக நடைமுறைக்கு வருவது மற்றொரு ஆதாரமானது. இதுவரை, 12 விளையாட்டு அரங்குகளின் கட்டுமானப் பணி முடிக்கப்பட்டுள்ளன.

சீனா திட்டப்படி குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்துவதன் மூலம் உலக வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்கும் என்று நம்புகின்றோம்.