கோவைட்-19 தடுப்பூசிகளின் செயல்பாட்டுத் திட்டத்தில் சீனா பங்களிப்பு
2021-02-05 20:24:09

வளரும் நாடுகளின் அவசர தேவைக்கு பயன்படுத்தும் விதமாக, கோவாக்ஸ் எனும் கோவைட்-19 தடுப்பூசிகளின் செயல்பாட்டுத் திட்டத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகளை அளிப்பதாக, சீன அரசு 3ஆம் நாள் அறிவித்தது. தடுப்பூசிகளை உலகின் பொதுப் பொருளாக விநியோகிப்பதில், சீனா சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கிறது.

தற்போது, 13 வளரும் நாடுகளுக்கு சீனா உதவியாக தடுப்பூசிகளை அனுப்புகிறது. அடுத்த கட்டம், தேவை இருக்கும் பிற 38 நாடுகளுக்கு சீனா உதவி அளிக்கும்.

முழுமையற்ற புள்ளிவிவரங்களின்படி, இதுவரை, உலகளவில் 40க்கும் அதிக நாடுகள், சீனாவின் தடுப்பூசிகளைப் பயன்படுத்த உள்ளது. இந்தோனேசியா, துருக்கி, செஷல்ஸ் ,ஜோர்டான் ஆகிய நாடுகளின் தலைவர்கள், சீனாவின் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டுள்ளனர்.

சீனத் தடுப்பூசிகள் அதிக அளவில் ஏற்றுக்கொள்ளப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

சீனத் தடுப்பூசிகளின் பாதுகாப்புத் தன்மை மற்றும் பயன் சோதனையில் மெய்பிக்கப்பட்டுள்ளன. சரியான விலை, அதை வாங்கும் நாடுகள் தனது செலவைக் குறைக்கலாம். மேலும் சீனத் தடுப்பூசிகள், 2 முதல் 8 வரையான டிகிரி செல்சியஸ் சூழலில் சேமிக்கப்பட்டு அனுப்பப்படும். வளரும் நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைக்கக் கூடிய சாத்தியம் பெருமளவில் அதிகரிக்கும்.

ஐ.நா.தலைமைச் செயலாளர் குட்டரெஸ் பேசுகையில், நியாயமான பங்கீட்டின் மூலம் அனைவருக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை பன்னாட்டுச் சமூகம் உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

வளரும் நாடுகள் நியாயமான முறையில் தடுப்பூசிகளைப் பெற்றால், அது, முழு உலகமும் தொற்று நோயைத் தோற்கடிப்பதற்கான திறவுக்கோலாகவும் உலகப் பொருளாதாரம் மீட்சி அடைவதற்கான பெரிய ஆதாரமாகவும் விளங்கும் என்று நம்புகின்றோம்.