தப்பெண்ணத்தை கைவிடுவது பொதுவான போக்கு
2021-02-07 20:39:07

“சுய நலன்” என்பது முந்தைய அமெரிக்க அரசின் முக்கிய இலக்காக இருந்தது. மதிப்புக் கண்ணோட்டத்தில் அமெரிக்காவின் புதிய அரசு கவனம் செலுத்துகின்றது. அமெரிக்க அரசுத் தலைவர் பைடன் அரசவையில் வெளியுறவுக் கொள்கை பற்றி நிகழ்த்திய உரையிலும், அமெரிக்க தூதாண்மைக் குழுவின் நடவடிக்கைகளிலும் ஒரு முக்கியமான சமிக்கை வெளியாகியுள்ளது. கூட்டணி நாடுகளுடனான உறவை சீராக்குதல், ஜனநாயகம் என்ற முக்கிய மதிப்பை மீண்டும் உருவாக்குதல், கூட்டணி நாடுகளை ஒன்றிணைத்து, சீனாவைத் தடுத்துக் கட்டுப்படுத்துதல் ஆகியவை இதில் உள்ளன.

ஆனால், 5ஆம் நாள், ஜெர்மனி தலைமையமைச்சர் ஏஞ்சலோ மெர்கெல் அம்மையார் கூறுகையில், ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பொது கருத்துக்கள் நிறைய இருந்தாலும், ஐரோப்பாவிற்கு "சீனாவுக்கான சுதங்திர கொள்கை" இன்னும் தேவைப்படுகிறது. பிரான்ஸ் அரசுத் தலைவர் மக்ரோன்னும் 4ஆம் நாள் இதே  கருத்துகளை வெளிப்படுத்தினார்.

உலகமயமாக்கல் போக்கில், பல்வேறு நாடுகளின் நலன்கள் நெருக்கமாக இணைந்துள்ளன. குறிப்பாக, கரோனா வைரஸ் தடுப்பில், ஒற்றுமை முக்கியத்துவம் வாய்ந்தது என்று பல்வேறு நாடுகள் கருதி வருகின்றன. சீனாவுடனான ஒத்துழைப்பு இன்றியமையாதது என்று பைடன் வலியுறுத்தி உள்ளார்.

தப்பெண்ணத்தை கைவிடுவது, வேற்றுமைகளைக் கட்டுப்படுத்துவது, ஒத்துழைப்பில் கவனம் செலுத்துவது ஆகியவை மக்களின் விரும்பமும் பொதுவான போக்காகவும் உள்ளது.