கரோனா வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வுக்கு சர்வதேச ஒத்துழைப்பு தேவை
2021-02-10 21:24:30

புதிய ரக கரோனா வைரஸ் தோற்றம் பற்றிய சீனா-உலகச் சுகாதார அமைப்பின் ஆய்வுக்கூட்டம் பிப்ரவரி 9ஆம் நாள் வூஹான் நகரில் நடைபெற்றது. அப்போது, வெளிநாட்டுக் குழு தலைவர் பீட்டர் பென் எம்பரேக் கூறுகையில், ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து கரோனா வைரஸ் பரவியதற்கு வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில், இந்தக் கோணத்தில் ஆய்வு செய்வது தேவையில்லை என்றார்.

கரோனா வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வு குறித்து சீனா வெளிப்படையாக உள்ளது. உலகச் சுகாதார அமைப்பு தொடர்புடைய பணிகளை மேற்கொள்வதுடன் சீனா எப்போதுமே ஆக்கமுடன் ஒத்துழைப்பதில் முன்முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வைச் சீனா தடுப்பதாகக் கூறுவது முற்றிலும் நகைப்பிற்குரியது.

2019ஆம் ஆண்டின் பிற்பாதியில், கரோனா வைரஸ் உலகத்தின் பல்வேறு இடங்களில் தோன்றியது என்ற செய்திகளை, இதுவரை மென்மேலும் அதிகமான செய்தி ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. கரோனா வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வு இன்றியமையாததாகவும் அவசரமாகவும் உள்ளது என்று தற்போதைய சான்றுகள் காட்டுகின்றன.

மேலும், பல்வேறு தரப்புகள் சீனாவுடன் இணைந்து, கரோனா வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வில், ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு மனப்பாங்கைக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் உலகத்தில் கொள்ளை நோய் இடர்பாடுகளைக் குறைப்பதற்குப் பல்வேறு நாடுகள் கூட்டாகப் பங்காற்றுவதை எதிர்ப்பார்க்கின்றோம்.