ஆக்கப்பூர்வமான சமிக்கையை வெளிப்படுத்தும் சீன-அமெரிக்கத் தலைவர்களின் தொடர்பு
2021-02-11 20:12:22

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும், அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனும் பிப்ரவரி 11ஆம் நாள் முற்பகல் தொலைப்பேசி உரையாடலின் போது ஒருவருக்கு ஒருவர் வசந்த விழா வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். அதோடு, இரு தரப்பு உறவும், சர்வதேச மற்றும் பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகளும் குறித்து கருத்துக்களை ஆழமாகப் பரிமாற்றிக் கொண்டனர்.

அமெரிக்காவில் புதிய அரசு வந்த பிறகு, சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் நேரடியாகத் தொடர்பு கொள்வது இதுவே முதல் முறை. இந்தத் தொடர்பு உலகத்துக்கு ஆக்கப்பூர்வமான சமிக்கையைக் காட்டும் என்று இரு தரப்பும் கருத்து தெரிவித்தன. சீன-அமெரிக்க உறவைக் மேம்படுத்தும் இரு நாட்டுத் தலைவர்களின் அரசியல் விருப்பத்தையும் இது வெளிப்படுத்தியுள்ளது.

சீன-அமெரிக்க ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கு நலன்களைத் தருகிறது. ஒத்துழைப்பு இன்றி எதிர்ப்பு இருந்தால், இரு நாடுகளிலும் பாதிப்பு தான் ஏற்படும் என்று ஷி ச்சின்பிங் மீண்டும் வலியுறுத்தினார்.

மேலும், அமெரிக்காவும் சீனாவும் மோதல்களைத் தவிர்த்து, ஒத்துழைப்புகளை மேற்கொள்ள வேண்டும். சீனாவுடன் மனம் திறந்த மற்றும் செயலாக்கம் வாய்ந்த பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா விரும்புகின்றது என்று பைடன் தெரிவித்தார். அமெரிக்கா விவேகத்துடன் பதிலளிப்பதை இது வெளிப்படுத்தியுள்ளது.

சீன-அமெரிக்கத் தலைவர்களின் இந்த தொடர்பில் ஏற்பட்ட ஒத்த கருத்துகளை அமெரிக்கா செயல்படுத்தி, சீனாவுடன் இணைந்து இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இது இரு நாடுகளின் நலன்களுக்குப் பொருந்தியது மட்டுமல்லாமல், சர்வதேசச் சமூகத்தின் பொது எதிர்பார்ப்பும் இதுவாகும்.