சீன-ஐரோப்பிய வர்த்தக அதிகரிப்பு
2021-02-19 20:03:47

2020ஆம் ஆண்டு அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா மாறியிருப்பது இதுவே முதல்முறையாகும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளிவிவரப் பணியகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தடுப்புப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள் முதலியவற்றின் மீதான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தேவையின் அதிகரிப்பு, சீனாவிலிருந்து அந்நாடுகளுக்கு தொடர்புடைய பொருட்கள் ஏற்றுமதி செய்வதைத் தூண்டியுள்ளது. அதோடு, சீனா உடனடியாக கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு, பணிக்குத் திரும்புவது, உள்நாட்டு நுகர்வை முன்னேற்றி, ஐரோப்பிய ஒன்றியத்தின் வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு அரிய சந்தையை வழங்கியுள்ளது.

உலகில் 2 பெரிய சந்தைகளாக, சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பயனுள்ள முறையிலான ஒத்துழைப்பை ஆழமாக்குவது கரோனா வைரஸ் பரவலுக்குப் பிந்தைய உலகப் பொருளாதாரத்தின் மீட்சிக்குத் துணை புரியும். இது, உலக வர்த்தகம், முதலீட்டுத் தாராள மயமாக்கம் மற்றும் வசதி மயமாக்கத்தை விரைவுபடுத்தி, திறந்த உலகப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கும் முக்கிய பங்காற்றும் என்று கருதப்படுகிறது.