வெளிநாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை பொதுப் பொருளாக வழங்கும் சீனா
2021-02-22 15:26:48

கரோனா தடுப்பூசியை உலகின் பொதுப் பொருளாக வழங்குவது பற்றிய வாக்குறுதியை சீனா நிறைவேற்றியுள்ளது. சீனாவின் பாரம்பரிய வசந்த விழா விடுமுறை நாட்களின் போதும், வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதை சீனா நிறுத்தவில்லை.

கடந்த சில நாட்களில், ஜிம்பாப்வே, செனெகல், ஹங்கேரி, பெரு முதலிய பல நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை சீனா வழங்கியுள்ளது.

தற்போது வரை, சீனாவிடம் கோரிக்கை விடுத்த 53 வளரும் நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக சீனா வழங்கியுள்ளது. அதோடு, 22 நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் கோரிக்கையின்படி, வளரும் நாடுகளின் தேவையை நிறைவு செய்யும் வகையில் புதிய கரோனா தடுப்பூசி நடைமுறை திட்டத்துக்கு ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்க சீனா தீர்மானித்துள்ளது.

ஒற்றுமையும் ஒத்துழைப்பும் சர்வதேச சமூகம் கரோனா வைரஸ் பரவலை வென்றெடுக்கும் வலிமை மிக்க ஆயுதமாகும் என்பதை உண்மைகள் நிரூபித்துள்ளன. பெரிய நாடு என்ற பொறுப்பேற்றுள்ள சீனா இயன்ற அளவில் தடுப்பூசிகளை பொது பொருட்களாக பன்னாட்டு மக்களுக்கு வழங்கி வருகிறது.