அமெரிக்காவுக்கு சீன வெளியுறவு அமைச்சர் வேண்டுகோள்
2021-02-22 16:01:13

சீன அரசவையின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, 22ஆம் நாள், பேச்சுவார்த்தையையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி சர்ச்சையைக் கட்டுப்படுத்தி சீன அமெரிக்க உறவை சரியான பாதையில் தூண்டுவது என்ற கருத்தரங்கின் துவக்க விழாவில் உரை நிகழ்த்தி, சீன அமெரிக்க உறவு சரியான பாதைக்கு திரும்புவதைத் தூண்டுவது குறித்து கருத்து தெரிவித்தார்.

அமெரிக்கா வெகுவிரைவில், சீன உற்பத்திப் பொருட்களின் மீது சரிசமமற்ற வரியை வசூலிப்பதையும், சீன தொழில் நிறுவனங்கள் மற்றும் அறிவியல் ஆய்வு மற்றும் கல்வி நிறுவனங்களின் மீது தடை மேற்கொள்வதையும் சீன அறிவியல் தொழில் நுட்பத்தின் முன்னேற்றத்தைத் தடுப்பதையும் கைவிட வேண்டும். அமெரிக்காவில் சீனாவின் கல்வி, பண்பாடு மற்றும் செய்தி குழுக்கள் சீனர்கள் குழு ஆகியவற்றின் நடவடிக்கை மீதான தடைகளையும் அமெரிக்க மாநில அரசுகள் சீனாவுடனான தொடர்பின் மீதான தடை நடவடிக்கைகளையும் அமெரிக்க அரசு நீக்க வேண்டும் என்று வாங் யீ வேண்டுகோள் விடுத்தார்.