அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பு: 5 இலட்சத்துக்கும் அதிகம்
2021-02-23 17:24:08

பிப்ரவரி 22ஆம் நாள் அமெரிக்காவில் புதிய ரக கரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 5 இலட்சத்தைத் தாண்டியது. இது, இரண்டு உலகப் போர்கள் மற்றும் வியட்நாம் போரில் உயிரிழந்த மொத்த அமெரிக்கர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.

கடந்த ஓராண்டில் கரோனா தடுப்புப் பணியின் போது அமெரிக்காவில் அரசியல் பிளவு, பொது மக்களின் உணர்ச்சியற்றவர்களாக இருப்பது, அறிவியலைப் புறக்கணிப்பது முதலிய பிரச்சினைகள் காணப்பட்டன என்று அமெரிக்காவின் செய்தி ஊடகங்கள் கருத்து தெரிவித்தன.

பிப்ரவரி 22ஆம் நாள் அமெரிக்க அரசுத் தலைவர் பைடன், வெள்ளை மாளிகையில், மௌன அஞ்சலி செலுத்தி, உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.