சீனாவின் வறுமை ஒழிப்பு வெற்றியின் திறவுகோல்
2021-02-25 20:50:11

சீனா, தீவிர வறுமை ஒழிப்புக் கடமையை நிறைவேற்றியுள்ளது என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார். வறுமை ஒழிப்பின் போக்கில் அசாதாரண காலங்களை அவர் மீட்டாய்வு செய்தார்.

உலகின் மிகப் பெரிய வளரும் நாடாக, வறுமை ஒழிப்பில் சீனா பெற்றுள்ள சாதனை, மனித உரிமை பாதுகாப்பின் முன்னேற்றங்களைக் காட்டுவதோடு, உலகின் வறுமை ஒழிப்புப் பணியையும் முன்னேற்றுவிக்கிறது. வறுமை ஒழிப்பின் வெற்றி என்பது, இறுதி புள்ளி அல்ல. மாறாக அது புதிய வாழ்க்கை மற்றும் முயற்சிக்கான தொடக்கப் புள்ளியாகும். எதிர்காலத்தில் கூட்டுச் செழுமை என்ற இலக்கை நோக்கி சீனா தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும்.