இலங்கை பற்றி சீனாவின் நிலைப்பாடு
2021-02-26 10:22:32

ஐ.நாவின் மனித உரிமை செயற்குழுவின் 46வது கூட்டத்தொடரில் பிப்ரவரி 25ஆம் நாள் இலங்கை பற்றி உரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது. ஐ.நாவின் ஜெனீவா பணியகம் மற்றும் ஸ்விட்சர்லாந்திலுள்ள வேறு சர்வதேச அமைப்புகளுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ச்சென்ஷு இதில் உரை நிகழ்த்தினார். அப்போது, இலங்கை அரசானது, மனித உரிமையை ஆக்கமுடன் பாதுகாப்பதைச் சீனா ஆதரித்து,  இலங்கை உள் விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடுவதை எதிர்ப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும், மனித உரிமை விவகாரத்தை அரசியல் மயமாக்குவதையும்,  இவ்விவகாரத்தில் இரட்டை வரையறை மேற்கொள்வதையும் சீனா எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.