உலக வறுமை ஒழிப்புக்குச் சீனாவின் பங்களிப்பு
2021-02-26 20:30:58

சீனாவில் கொடிய வறுமை ஒழிக்கப்பட்டது என்று 25ஆம் நாள் சீனா அறிவித்தது. ஐ.நா.வின் 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலில் நிர்ணயிக்கப்பட்ட வறுமை ஒழிப்பு இலக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே சீனா நிறைவேற்றியுள்ளது. இச்சாதனை, "சீனாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கும் சொந்தமானது".

வறுமை ஒழிப்பு, ஒரு கற்பனாவாத கனவு அல்ல, மாறாக அதை நனவாக்க முடியும் என்று சர்வதேச வேளாண்மை வளர்ச்சி நிதியத்தின் ஆசிய-பசிபிக் பிரிவின் தலைவர் நைகல் பிரட் கூறினார்.

அதே வேளை, கடந்த 60க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக, 166 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு 6 இலட்சத்துக்கும் மேற்பட்ட உதவி பணியாளர்களைச் சீனா அனுப்பி, அவற்றுக்கு உதவியளிக்க, ஏறக்குறைய 40 ஆயிரம் கோடி யுவானை வழங்கியுள்ளது. அவை "உலக வறுமை ஒழிப்புக்கான சீனாவின் மற்றொரு பங்களிப்பாகும்" என்று ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்தார்.