சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் கூட்டம்
2021-02-26 18:56:14

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் கூட்டம் பிப்ரவரி 26ஆம் நாள் நடைபெற்றது. அதில் தேசியப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான 14ஆவது ஐந்தாண்டு திட்டம், 2035ஆம் ஆண்டுக்கான நெடுநோக்கு இலக்கு வரைவு, அரசு பணியறிக்கை ஆகியவை பரிசீலனை செய்யப்பட்டன. இக்கூட்டத்துக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொது செயலாளர் ஷிச்சின்பிங் தலைமை தாங்கினார்.

இவ்வாண்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி இலக்கை நனவாக்கும் போது, நோய் பரவல் தடுப்பை, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியுடன் இணைத்து, ஒட்டுமொத்தக் கொள்கையின் தொடர்ச்சி, நிதானம் மற்றும் தொடரவல்ல தன்மையை நிலைநிறுத்த வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.