மக்களின் நலன்களில் சீன அரசு கவனம் செலுத்துவது
2021-02-26 17:17:04

மக்களின் நலன்களில் சீன அரசு கவனம் செலுத்துவது_fororder_1111111

“ஒவ்வொரு கிளைக்கும் ஒவ்வோர் இலைக்கும் உணர்வுகள் உள்ளன“ என்பது பண்டைய காலத்தில் சீனாவின் புகழ்பெற்ற ஓவியரும் இலக்கிய எழுத்தாளருமான ஜெங் பான்கியாவ் தனது மூங்கில் ஓவியங்களில் எழுதிய கவிதையில் ஒரு வரியாகும்.

200க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பிறகு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் இந்த வாக்கியத்தை அடிக்கடி மேற்கோள் காட்டி, பொது மக்களுடன் தொடர்புடைய ஒவ்வொரு விவரத்திலும் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு அதிகாரியும் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்து வந்தார்.  

2020ஆம் ஆண்டில் உலகளவில் புதிய ரக கரோனா வைரஸ் பரவி வரும் நிலைமையில், “மக்களே முதன்மை” என்ற கருத்தைச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றி, சீன மக்களுக்குத் தலைமை தாங்கி, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தி, இயல்பான நிலைக்குத் திரும்பி, பொருளாதாரத்தை வளர்த்து வருகின்றது. மக்களின் நலன்களில் சீன அரசு மிகவும் கவனம் செலுத்தி வருகின்றது. அமெரிக்க அரசை விட மக்கள் நலன்களுக்குச் சீன அரசு மேலும் மேலதிகப் பொறுப்பேற்றுள்ளது என்று அண்மையில், அமெரிக்காவின் டெஸ்லா தொழில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாஸ்க் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.