அமெரிக்காவின் புதிய நிதியுதவி திட்டம்
2021-02-27 21:36:07

ஒரு இலட்சத்து 90ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள புதிய சுற்று பொருளாதார உதவித் திட்டம் பிப்ரவரி 27-ஆம் நாளில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அமெரிக்க அரசுத் தலைவர் ஜொங் பைடன் முன்வைத்த புதிய திட்டத்தில், புதிய ரக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அமெரிக்க குடும்பங்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் நிதி ஆதரவு அளிக்கப்படும். தகுதியானவர் ஒவ்வொருக்கும் 1400 அமெரிக்க டாலர் உதவி நிதி வழங்குதல், தகுதியான வேலையில்லாதோருக்கு வாரத்துக்கு 400 அமெரிக்க டாலர் நிதியுதவி அளித்தல் உள்ளிட்டவை புதிய திட்டத்தில் இடம்பெறுகின்றன.

தவிரவும், புதிய ரக கரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணிக்கும் வைரஸ் பரிசோனைப் பணிக்கும், இத்திட்டம் தலா 2000கோடி அமெரிக்க டாலர் மற்றும் 5000கோடி அமெரிக்க டாலர் நிதிகளை வழங்கும். மேலும், உள்ளூர் அரசுகளுக்கு 35000கோடி அமெரிக்க நிதியுதவி இது வழங்கும்.