நியூயார்க்கில் உருமாறிய கரோனா வைரஸ் அச்சுறுத்தல்
2021-02-27 18:34:50

அமெரிக்காவின் சி.என்.என் தொலைக்காட்சி நிறுவனம் 24ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, நியூயார்க் மற்றும் அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதிகளில் உருமாறிய கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்கவின் 2 சுதந்திரமான ஆய்வுக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

கடந்த சில வாரங்களில் இந்த உருமாறிய கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ளது. அமெரிக்க தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, உள்ளூர் நேரப்படி 23ஆம் நாள் வரை, உருமாறிய கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 2000ஆக பதிவானது.