2021 சீன வெளிநாட்டு வர்த்தக தொகை புதிய பதிவு உருவாக்கும்
2021-02-27 18:22:56

சீனச் சர்வதேச பொருளாதார பரிமாற்ற மையம் 26ஆம் நாள் சீன உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தேவை மாற்றம் பற்றி கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. அப்போது 2021ஆம் ஆண்டு சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத் தொகை வரலாற்றில் புதிய பதிவை உருவாக்கும் நிலை தொடரும் என்று பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் நாட்டு வளர்ச்சி ஆய்வகத்தின் துணைத் தலைவர் யு மியௌஜியெய் இக்கருத்தரங்கில் தெரிவித்தார்.

தற்போது சீனாவின் கரோனா பரவல் நிலைமை கட்டுப்பாட்டுக்குள்ளானது. உலக பிற நாடுகள் இன்னும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றின் இறக்குமதிப் பொருட்கள் சீனாவை பெரிதும் சார்ந்திருக்கும். எனவே சீனாவின் ஏற்றுமதி நிலையாக வளர்ந்திருக்கும். மேலும், 4ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியின் துவக்கம் மற்றும் இறக்குமதியை விரிவாக்கும் கொள்கைகளின் நடைமுறையாக்கத்துடன் சீனாவின் இறக்குமதியும் நிலையாக இருக்கும் என்றும் யு மியௌஜியெய் குறிப்பிட்டார்.