சீனாவின் வறுமை ஒழிப்பு அனுபவங்களின் பகிர்வு
2021-02-27 19:26:09

ஐ·நா மனித உரிமை மன்றத்தின் 46ஆவது கூட்டத் தொடரில் மனித உரிமையின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டில் வறுமை ஒழிப்பின் பங்களிப்பு பற்றிய கூட்டம் நடைபெற்றது. சீனத் தேசிய கிராமப்புற வளர்ச்சி ஆணையத்தின் பொதுப் பிரிவுத் தலைவர் சு குவோசியா அழைப்பை ஏற்று இக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறுகையில், சீன அரசு எப்போதும் மக்களை மையப்படுத்தி வறுமை ஒழிப்பு மூலம் மனித உரிமையை மேலும் செவ்வனே உறுதிப்படுத்தி முன்னேற்றியுள்ளது. 2012ஆம் ஆண்டு முதல் உலக வரலாற்றில் மிக அளவிலான வறுமை ஒழிப்புத் திட்டங்களைச் சீனா நடைமுறைப்படுத்தியுள்ளது. கரோனா வைரஸின் கடும் அறைக்கூவலைச சமாளித்து திட்டத்தின்படி வறுமை ஒழிப்பு இலக்கை நனவாக்கியுள்ளது. 140கோடி மக்கள் தொகை கொண்ட வளரும் நாடான சீனாவிலே தீவிர வறுமை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. மக்களின் வருவாய் மற்றும் வாழ்க்கை தரம் தெளிவாக உயர்ந்துள்ளது. 

பல்வேறு நாட்டு மக்களுடன் இணைந்து வறுமையில்லாத மனிதகுலத்துக்குப் பொது எதிர்கால சமூகத்தை கட்டியமைத்து மனித உரிமையை மேலும் நன்றாக பேணிக்காக்கும் வகையில் சீனா செயல்பட விரும்புவதாக சு குவோசியா குறிப்பிட்டார்.