“வறுமை ஒழிப்பு: சீனாவின் அனுபவம் மற்றும் பங்களிப்பு” எனும் வெள்ளை அறிக்கை
2021-04-06 12:15:33

“வறுமை ஒழிப்பு: சீனாவின் அனுபவம் மற்றும் பங்களிப்பு” எனும் வெள்ளை அறிக்கை_fororder_1127298466_16176894027891n

“வறுமை ஒழிப்பு: சீனாவின் அனுபவம் மற்றும் பங்களிப்பு” எனும் வெள்ளை அறிக்கை ஒன்றைச் சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் 6ஆம் நாள் வெளியிட்டது.

கடந்த 100 ஆண்டுகளாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்கத் தலைமை தாங்கி, அவர்களை ஒற்றுமையுடன் வழிநடத்தி வறுமையுடன் போராடி வருவதை இவ்வறிக்கை பன்முகங்களிலும் மீளாய்வு செய்துள்ளது.

“வறுமை ஒழிப்பு: சீனாவின் அனுபவம் மற்றும் பங்களிப்பு” எனும் வெள்ளை அறிக்கை_fororder_1127298466_16176894028201n

இவ்வறிக்கையில், கடந்த 8 ஆண்டு கால தொடர்ச்சியான முயற்சியுடன், 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள், புதிய யுகத்தில் வறுமை ஒழிப்பு இலக்கை சீனா திட்டப்படி நிறைவேற்றியுள்ளது. சீன தேசத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டு கால வளர்ச்சி வரலாற்றில் வறுமையை முதல்முறையாகவும் ஒட்டுமொத்தமாகவும் ஒழித்து வறுமை ஒழிப்புப் போரில் வெற்றி பெற்றுள்ள சீனா, மக்களின் கனவை நனவாக்கியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இவ்வறிக்கையில், உலகின் மொத்த மக்கள்தொகையில் 20 விழுக்காட்டு மக்களைக் கொண்ட சீனா வறுமையைப் பன்முகங்களிலும் ஒழித்து, ஐ.நாவின் 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி நிரலிலுள்ள வறுமை ஒழிப்பு இலக்கை 10 ஆண்டுகளுக்கு முன்னதாக நனவாக்கியுள்ளதாகவும், இது, சீன தேச வளர்ச்சி வரலாற்றிலும், மனிதகுல வறுமை ஒழிப்பு மற்றும் மனிதகுல வளர்ச்சி வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்த சாதனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.