ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை பற்றிய கூட்டம் தொடக்கம்
2021-04-07 18:18:24

ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை தொடர்பான பன்முக உடன்படிக்கைக்கான கூட்டு ஆணையத்தின் கூட்டம் ஒன்று 6ஆம் நாள் நடைபெற்றது. ஐரோப்பிய வெளியுறவு செயல் பணியகத்தின் துணை தலைமைச் செயலாளர், ஈரான் துணை வெளியுறவு அமைச்சர், ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் அதிகாரிகள், வியன்னாவிலுள்ள ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி வாங் சுன் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். அமெரிக்காவும் ஈரானும் உடன்படிக்கையை மீண்டும் செயல்படுத்துவது குறித்து அவர்கள் விவாதித்தனர்.

அமெரிக்க அரசு, இவ்வுடன்படிக்கையிலிருந்து ஒரு சார்பாக விலகி, ஈரான் மீது தடை நடவடிக்கை மேற்கொள்வது என்பது ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை பதற்ற நிலைமை ஏற்படுவதற்கான முக்கியக் காரணமாகும். ஈரான் மீதான அனைத்து சட்டவிரோத பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா நீக்க வேண்டும். இந்த அடிப்படையில், அணு ஆற்றல் உடன்படிக்கையை ஈரான் மீண்டும் செயல்படுத்தும் என்று வாங் சுன் கூறினார்.