பிரேசிலில் ஒரே நாளில் 4000க்கும் மேலான உயிரிழப்பு
2021-04-07 16:16:19

பிரேசில் சுகாதார அமைச்சகம் 6ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, அந்நாட்டில் 86ஆயிரத்து 979பேர் கடந்த 24மணிநேரங்களில் கரோனா வைரஸால் புதிதாகப் பாதிக்கப்பட்டனர். இதுரை அந்நாட்டில் கரோனா தொற்றுப் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 31லட்சத்து 58ஐ தாண்டியுள்ளது. மேலும் கடந்த 24மணிநேரங்களில் உயிரிழப்பு எண்ணிக்கை 4195ஆகப் பதிவாகியுள்ளது. கரோனா பரவல் ஏற்பட்ட பிறகு, ஒரே நாளில் 4000க்கும் மேலான உயிரிழப்பு ஏற்பட்டது இதுவே முதன்முறையாகும்.

மார்ச் திங்கள் சாவ் பாலோ மாநிலம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஊடரங்கு விதி கண்டிப்புடன் செயல்படுத்தப்பட போதிலும், இந்த நடவடிக்கைகள் தாமதமாக நடைமுறைப்படுத்தப்பட்டது என பிரேசிலின் நிபுணர்கள் பலர் கருதுகின்றனர்.