கிழக்கு உக்ரைன் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா பங்கேற்க முடியாது
2021-04-07 17:32:41

அமெரிக்க நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, கிழக்கு உக்ரைன் பிரச்சினைக்கான ஒருங்கிணைப்பு பேச்சுவார்த்தையில் அமெரிக்கா பங்கேற்க முடியாது என்று ரஷிய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கொவ் 7ஆம் நாள் தெரிவித்தார்.

ரஷியா மற்றும் அமெரிக்காவின் பிரதிநிதிகள் 6ஆம் நாள் கிழக்கு உக்ரைன் நிலைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ரஷிய பிரதிநிதி ஒருவர் கூறுகையில், உக்ரைன் அதிகார வட்டாரமும் அதற்குப் பிந்தைய அமெரிக்காவின் தலைமையிலான மேலை நாடுகளும் ஆத்திரமூட்டலின் விளைவுகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.