கேமரூனுக்குக் கரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கிய சீனா
2021-04-12 10:24:47

கேமரூனுக்குக் கரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கிய சீனா_fororder_1127319167_16181914585391n

கேமரூனுக்கு சீன அரசு நன்கொடையாக வழங்கிய தடுப்பூசிகள் 11ஆம் நாளிரவு அந்நாட்டின் தலைநகர் யவுண்டேவைச் சென்றடைந்தன. கேமரூனில் தொற்று நோய் தோன்றிய பின்னர் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

சீனாவும் கேமரூனும் தூதாண்மை உறவை உருவாக்கிய 50ஆவது ஆண்டு நிறைவு இவ்வாண்டாகும். இந்தச் சிறப்புமிக்க தருணத்தில் கேமரூனுடன் இணைந்து, பொது சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விரும்புவதாக கேமரூனுக்கான சீனத் தூதார் வாங் யிங்வூ கூறினார்.

கேமரூனுக்குக் கரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கிய சீனா_fororder_1127319167_16181914586091n

சீனா வழங்கிய தடுப்பூசி உதவிக்குக் கேமரூன் நான்றி மற்றும் பாராட்டுத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்ட அந்நாட்டுத் தலைமையமைச்சர், சீனாவின் இச்செயல், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுக்கு மற்றொரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் கூறினார்.