அணு வசதிகள் மீதான பகைமை நடவடிக்கை மீது ஈரான் அணு ஆற்றல் நிறுவனம் குற்றச்சாட்டு
2021-04-12 11:33:22

ஈரான் அணு ஆற்றல் அமைப்பின் தலைவர் சலேஹி 11ஆம் நாள், ஈரானின் நதன்ஸ் அணு வசதிக்கு எதிரான பகைமை நடவடிக்கையைப் பயங்கரவாத செயலாகும் என்று குற்றம் சாட்டினார்.

ஈரானின் தொழில் மற்றும் அரசியல் முன்னேற்றத்தைத் தடுக்க முயலும் சக்திகள், ரானின் அணு தொழில் பெரும் முன்னேற்றம் அடைவதைத் தடுக்க முடியவில்லை. மேலும், ஈரான் மீதான அமெரிக்காவின் தடை நவடிக்கையை நீக்கும் விதம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையும் சீர்குலைக்க முடியவில்லை என்பதை நதன்ஸ் அணு வசதியை இலக்காக கொண்ட நடவடிக்கை காட்டுகிறது என்று ஈரான் தஸ்னிம் செய்தி நிறுவனம் சலேஹியின் கூற்றை மேற்கோள்காட்டி தகவல் வெளியிட்டது.

இவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் இதற்கு முன் கூறுகையில், நதன்ஸ் அணு வசதியின் மின்னாற்றல் முறைமையில் 11ஆம் நாள் விபத்து நிகழ்ந்தது. ஆனால் காயம் அல்லது கதிரியக்க மாசுபாடு ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.