ஜப்பானின் அணு மின் நிலையத்தின் கழிவு நீர் வெளியேற்றம் பற்றி சீனாவின் கோரிக்கை
2021-04-12 17:27:05

ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் கழிவு நீரை கடலில் வெளியேற்ற ஜப்பான் திட்டமிட்டது பற்றி, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 12ஆம் நாள் கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், சர்வதேச பொது நலன் மற்றும் சீன மக்களின் உடல் நலத்தை பேணிக்காக்கும் வகையில், தூதாண்மை வழிமுறையின் மூலம் சீனா ஜப்பான் மீது கவனம் செலுத்தி வருகிறது. ஜப்பான் பொறுப்பான நிலைப்பாட்டுடன், ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் கழிவு நீர் வெளியேற்றத்தை கவனமாகக் கையாள வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த விடயம், மிக முக்கியமானதாக இருக்கிறது. ஜப்பான் சர்வதேச பொது நலனுக்கும், சொந்த நாட்டு மக்களின் நலனுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கூறினார்.