ஹை நான் தாராள வர்த்தக துறைமுகத்தின் கொள்கை ஆக்கப்பணி
2021-04-12 18:41:39

சீன அரசவை தகவல் தொடர்பு அலுவலகத்தின் செய்தியாளர் கூட்டம் 12ஆம் நாள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம், நிதி அமைச்சகம், வணிக அமைச்சகம் ஆகிய வாரியங்களின் பொறுப்பாளர்கள், ஹை நான் தாராள வர்த்தக துறைமுகத்தின் கொள்கை விதிமுறை ஆக்கப்பணி நிலைமையை அறிமுகப்படுத்தினர்.

கடந்த 3 ஆண்டு காலத்தில், குறிப்பாக, ஹை நான் தாராள வர்த்தக துறைமுகத்தின் ஆக்கப்பணி பற்றிய பொது திட்டம் வெளியிட்ட பிறகு, தொடர்புடைய வாரியங்கள், வர்த்தகம், முதலீடு, சரக்கு போக்குவரத்து முதலிய துறைகளில் நிறைய புதிய கொள்கைகளை வெளியிட்டு, இத்துறைமுகத்தின் ஆக்கப்பணியை முன்னேற்றி வருகின்றன.