ஆஸ்திரேலிய குடிமக்கள் கட்சியின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை
2021-04-12 18:58:07

ஆஸ்திரேலியாவின் குடிமக்கள் கட்சியின் இணையத் தளத்தில் ஏப்ரல் திங்கள் துவக்கத்தில் வெளியிடப்பட்ட சிறப்பு அறிக்கை ஒன்றில், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சில மேலை நாடுகள், புவியியல் அரசியல் நோக்கத்துடன், பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரித்து, சீனாவின் நிதானத்தை சீர்குலைத்து, சீனாவின் வளர்ச்சியைத் தடுக்க முயன்று வருவது பற்றி விவரமாக விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு அறிக்கையில், 8 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த சில ஆண்டுகளில், உலகப் பொருளாதார அதிகரிப்புக்கு முக்கிய இயக்கு ஆற்றலாக சீனா மாறியுள்ளது. சில நாடுகள் மற்றும் அமைப்புகள், சின்ச்சியாங் பிரச்சினையைப் பயன்படுத்தி, சீனா பற்றி அவதூறு பரப்புவது முறையற்ற செயல் ஆகும் என்று இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.