பொதுச் சுகாதார நடவடிக்கைகளின் முக்கியத்துவம்
2021-04-13 15:12:55

தற்போதைய நிலவரப்படி, உலகளவில் 78 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இருப்பினும் ஒவ்வொரு வாரமும் கரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, பல்வேறு நாடுகளும் கண்டிப்பான முறையில் பொதுச் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உலகச் சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் 12ஆம் நாள் கூறினார்.