முதல் காலாண்டில் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி தொகை
2021-04-13 16:35:17

முதல் காலாண்டில் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி தொகை_fororder_src=http-%2F%2Fstatic.jstv.com%2Fimg%2F2020%2F4%2F3%2F2020431585867460831_228&refer=http-%2F%2Fstatic.jstv

13ஆம் நாள் காலை, சீன அரசவையின் தகவல் தொடர்பு அலுவலகம் செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. இவ்வாண்டு முதல் காலாண்டில், சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 29.2 விழுக்காடு அதிகரித்தது. ஏற்றுமதி இறக்குமதி வளர்ச்சி போக்கு சீராக இருக்கிறது என்று சீன சுங்க துறை தலைமை பணியகத்தின் செய்திதொடர்பாளர் லி குய் வென் அறிமுகப்படுத்தினார்.

சுங்க துறையின் புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டு முதல் காலாண்டில், சீன ஏற்றுமதி இறக்குமதி தொகை 8 இலட்சத்து 47 ஆயிரம் கோடி ரென் மின் பி யுவானாகும். இதில் ஏற்றுமதி தொகை 4 இலட்சத்து 61 ஆயிரம் கோடி யுவானாகும். இத்தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 38.7 விழுக்காடு அதிகமாகும். இறக்குமதி தொகை 3 இலட்சத்து 86 ஆயிரம் கோடி யுவானாகும். இத்தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 19.3 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.