பாரம்பரியத்தைப் பின்பற்றி கார்பன் குறைந்த எதிர்காலத்திற்கு செல்லும் சீனாவின் பசுமைப் பாதை
2021-05-07 15:51:26

உரிய முறையில் இயற்கை வளங்களைப் பயன்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான திறவுக்கோல் ஆகும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 2019ஆம் ஆண்டு சர்வதேச தோட்டக்கலை கண்காட்சியின் துவக்க விழாவில் உரை நிகழ்த்துகையில் ஒரு பழமொழியை மேற்கோள் காட்டிக் கூறினார்.

இந்த பழமொழி, வடக்கு சொங வம்சக் காலத்தில் ஸிமா குவாங் என்பவரால் தொகுத்து எழுதப்பட்ட “ஸிட்சிடோங்ஜியான்”(நிர்வாக உதவிக்கான விரிவான கண்ணாடி) எனும் சீன வரலாற்றுப் படைப்பில் உள்ள ஒரு வார்த்தை ஆகும். இயற்கைக்கும் மனிதர்களுக்கும் இடையிலான சமநிலை குறித்து சீனாவின் பண்டைய ஞானத்தை இந்த பழமொழி எடுத்துக்காட்டுகிறது. இயற்கை வளங்களை உரிய முறையில் பயன்படுத்துவது பற்றிய யோசனை இன்று சீனாவில் புதிய அர்த்தம் பெற்றுள்ளது.