ஆய்வகத்தில் வைரஸ் கசிவு என்று பரப்பிய அமெரிக்காவின் செயல் கேலிக்கூத்து
2021-05-31 20:19:56

வைரஸ் தோற்ற ஆய்வுப் பணி அரசியலால் பாதிக்கப்பட்டு வருகிறது என்று உலக சுகாதார அமைப்பின் அவசரத் திட்ட செயல்பாட்டு இயக்குநர் மைகில் ராயன் அண்மையில் வெளிப்படையாகத் தெரிவித்தார். ஆய்வகத்தில் வைரஸ் கசிவு என்ற கூற்றை மீண்டும் பரப்பிய அமெரிக்க அரசியல்வாதிகள் சிலரின் மீதான சர்வதேச சமூகத்தின் குற்றஞ்சாட்டை இது பிரதிபலிக்கிறது.

சீனாவில் பலமுறை ஆய்வுப் பயணம் மேற்கொண்ட உலக சுகாதார அமைப்பு இவ்வாண்டின் மார்ச் திங்கள் வெளியிட்ட அறிக்கையில், புதிய ரக கரோனா வைரஸ் ஆய்வகத்திலிருந்து மனிதருக்குப் பரவுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனால் சீனா மீது மீண்டும் பழி தூற்றும் விதம் அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர் அறிவியலுக்குப் புறம்பான முறையைப் பயன்படுத்தி வருவது அபத்தமாக உள்ளது. ஆய்வு மேற்கொள்ள உளவுத் துறைக்கு கட்டளையிட்டது, 90 நாட்கள் ஆய்வு வரம்பை வகுத்தது, ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதற்கான சான்றுகளை உளவுத் துறை பெற்றுள்ளதாக தெரிவித்திருந்த செய்தியாளர் மைகில் கோர்டன் வூஹான் ஆய்வகத்திலிருந்து வைரஸ் கசிந்ததாக பொய் கூற்றை பரப்பியது ஆகியவை எல்லாம் அமெரிக்காவின் அரசியல் சூழ்ச்சிதான்.

உலகளவில் சீனாவின் செல்வாக்கை எவ்வாறு பாதிக்க முடியுமோ அவ்வாறு செய்ய அரசு முயலும் என்று அமெரிக்க ஜார்ஜிடவுன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கவனா அண்மையில் பேட்டியளித்த போது தெரிவித்தார். சீனாவை தனது மிகப் பெரிய போட்டியாளராகக் கருதும் பின்னணியில் அமெரிக்கா செயல்படுவதை இது காட்டுகிறது.