கரோனா வைரஸ் தோற்ற ஆய்வில் அமெரிக்கா வேண்டுமென்றே தலையீடு
2021-06-03 17:29:01

புதிய ரக கரோனா வைரஸ் தோற்றம் பற்றி, அமெரிக்கா அண்மையில் வேண்டுமென்றே புதிய சுற்று பரப்புரை செய்யத் தொடங்கியது.

முதலில், உலகச் சுகாதார மாநாட்டை முன்னிட்டு, வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட கட்டுரையில், ஒரு ரகசியமான உளவுத் தகவலின்படி, கரோனா வைரஸ் தோற்றம் வூஹான் வைரஸ் ஆய்வகத்துடன் தொடர்புடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஊடகங்கள் இதைப் பின்பற்றி வேண்டுமென்றே பரப்புரை செய்து வருகின்றன. இதையடுத்து, பொது மக்கள் அளித்த நிர்ப்பந்தம் என்ற சாக்குப்போக்கால், உளவுத் துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அரசியல்வாதிகள் கட்டளை பிறப்பித்தனர்.

உளவுத் துறை அறிவியல் ஆய்வு செய்வது நகைப்பிற்கிடமானது. மேலும், அமெரிக்க உளவுத் துறைக்கு நம்பகத்தன்மை என்று எதுவும் இல்லை என்பது குறிப்படத்தக்கது.

இந்தக் கேலிக் கூத்தால் உலகத்தை ஏமாற்ற முடியாது. கரோனா வைரஸ் தோற்ற ஆய்வு, அரசியலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது என்று உலகச் சுகாதார அமைப்பு பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொய் கூற்றின் அடிப்படையிலான முடிவை யாரையும் நம்ப வைக்க முடியாது.