சீனாவின் வெளிநாட்டு வர்த்தக மீட்சி
2021-06-08 15:06:53

சீனச் சுங்க துறை தலைமைப் பணியகம் 7ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 5 திங்கள்களில், சீனாவின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 28.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது, தொடர்ந்து 12 மாதங்களாக அதிகரித்து வருகிறது.

சீனாவின் வெளிநாட்டு வர்த்தக மீட்சி வலுவாகவுள்ளதுடன், உலகப் பொருளாதார மீட்சிக்கான ஆதரவையும் நம்பிக்கையையும் வழங்கியுள்ளது. சீன அரசு செயல்படுத்திய பல நடவடிக்கைகள், தொற்று நோயால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவை அளித்துள்ளன.

உலகளாவிய தொழில் சங்கிலி மற்றும் விநியோகச் சந்கிலியில் சீனா முக்கிய இடம் வகிக்கிறது. இதன் காரணாமாக வலுவான சீன சந்தையானது நாடு கடந்த நிறுவனங்களால் புறக்கணிக்க முடியாத லாப ஆதாரமாக மாறியுள்ளது. சீனாவின் வெளிநாட்டு வர்த்தக நிலைமை தொடர்ந்து மேம்பட்டுள்ள போதிலும், தற்போதைய உலகில் தொற்று நோய் நிலைமை கடினமாக இருக்கின்றது. இது உலக வர்த்தக வளர்ச்சிக்கு அறைகூவலாக அமைந்துள்ளது. புவியமைவு சார் அரசியலும் வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சிக்குப் பாதிப்புகளை உருவாக்கியுள்ளது பல உறுதியற்ற காரணிகளை எதிர்கொள்ளும், சீனா தொடர்ந்து உலகமயமாக்கம் மற்றும் பலதரப்புவாதத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றது.