நேபாளத்தில் முதியோர்களுக்கு சீன தடுப்பூசி போடும் பணி துவக்கம்
2021-06-09 11:01:18

நேபாளத்தில் புதிய சுற்று கரோனா தடுப்பூசி போடும் பணி ஜூன் 8ஆம் நாள் துவங்கியது. அந்நாட்டில் சுமார் 5 லட்சம் பேர் சீனா நன்கொடையாக வழங்கிய தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளவுள்ளனர்.

திட்டத்தின்படி, காத்மாண்டு பள்ளத்தாக்கு பிரதேசத்தைச் சேர்ந்த 60 முதல் 64 வரை வயது கொண்டோர், இப்பிரதேசத்துக்கு அப்பாலுள்ள இடங்களைச் சேர்ந்த 62 முதல் 64 வரை வயது கொண்டோர், கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளாத மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவப் பள்ளி மாணவர்கள் முதலியோர் இக்கட்டத்தில் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளவுள்ளனர்.

நேபாளச் சுகாதார மற்றும் மக்கள் தொகை அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சீனாவின் கரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் உள்ளன. பல்வேறு இடங்களின் தேவைகளுக்கிணங்க, நேபாளம் இத்தடுப்பூசிகளை வினியோகம் செய்துள்ளது என்று தெரிவித்தார்.