சீன-பிலிப்பைன்ஸ் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 46ஆம் ஆண்டு நிறைவு
2021-06-09 13:29:24

சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 46ஆம் ஆண்டு நிறைவு மற்றும் பிலிப்பைன்ஸ் சுதந்திரம் பெற்ற 123ஆவது ஆண்டு நிறைவு ஆகியவற்றின் பொருட்டு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுன் 9-ஆம் நாள் பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர் டுடார்தேவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.

தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் இரு நாட்டுறவின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ள ஷிச்சின்பிங், டுடார்தேவுடன் இணைந்து கூட்டாக முயற்சி மேற்கொண்டு, இரு நாட்டுறவு நிதானமாகவும் நீண்டகாலமாகவும் வளர்வதற்குத் தலைமைத் தாங்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இச்சிறப்புமிக்க தருணத்தை முன்னிட்டு சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீயும், பிலிப்பைன்ஸின் வெளியுறவு அமைச்சர் தியோடொரோ லோச்சென்னுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.