அமெரிக்கா தடை நடவடிக்கைகளை முழுமையாக நீக்க வேண்டும்:சீனா
2021-06-13 16:53:12

ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை பற்றிய பன்முக உடன்படிக்கையின் புதிய சுற்று பேச்சுவார்த்தைக்கான ஆயத்தக் கூட்டம் ஜூன் 12ஆம் நாள் வியன்னாவில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சீனாவின் பிரதிநிதி சீனாவின் நிலைப்பாட்டை விளக்கிக் கூறினார். அவர் கூறுகையில், தடை நடவடிக்கைகளை நீக்குவது பற்றியும், தொடர்புடைய பிரச்சினைகள் தீர்ப்பது பற்றியும் இப்பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படவில்லை. பன்முக உடன்படிக்கை மீண்டும் துவங்கச் செய்ய, அமெரிக்கா முதலில் ஈரான் மீதான ஒரு சார்பு தடை நடவடிக்கையை நிறுத்த வேண்டும். அதே வேளை, தொடர்புடைய தரப்புகள் இவ்வுடன்படிக்கையிலிருந்து விருப்பப்படி விலகி  மீண்டும் தடை நடவடிக்கைகளை விதிக்காமல் தவிர்க்குமாறு, பல்வேறு தரப்புகள் பேச்சுவார்த்தையின் மூலம் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சீன பிரதிநிதி தெரிவித்தார்.