கூட்டு செழுமையான முன்மாதிரி மண்டலம் கட்டியமைக்க சேச்சியாங் முயற்சி
2021-06-13 15:44:05

கூட்டு செழுமையான முன்மாதிரி மண்டலம் கட்டியமைக்க சேச்சியாங் முயற்சி_fororder_0613zhejiang

சேச்சியாங் மாநிலத்தின் தரமான வளர்ச்சிக்கு ஆதரவளித்து கூட்டு செழுமை பெற்ற முன்மாதிரி மண்டலத்தைக் கட்டியமைப்பது பற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் முன்மொழிவு ஆவணம் அண்மையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த ஆவணத்தின்படி, நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி சேச்சியாங் மாநில அரசு ஆராய்ந்து கொண்டிருக்கிறது. கூட்டுச் செழுமைக்குப் பொருந்திய அமைப்பு முறை மற்றும் கொள்கை முறையை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. மேலும், பொருளாதாரத்தின் தரமான வளர்ச்சி, ஊதியப் பங்கீட்டு முறையின் சீர்த்திருத்தம், பொதுச் சேவையின் பயனுள்ள பகிர்வு உள்ளிட்ட 7துறைகளில் சேச்சியாங் மாநில அரசு 52 மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.