சீனாவில் அன்னிய முதலீட்டு அதிகரிப்பு
2021-06-13 17:00:51

சீன வணிக அமைச்சம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, 2021ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில், சீனாவில் உண்மையில் பயன்படுத்தப்பட்ட அன்னிய முதலீட்டுத் தொகை, 2020ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 35.4 விழுக்காடு அதிகமாகும். 2019ஆம் ஆண்டில் இருந்ததை விட, 30.3 விழுக்காடு அதிகமாகும்.

சேவைத் துறையும் உயர் தொழில்நுட்பத் துறையும் அதிகமான முதலீட்டை ஈர்க்கும் துறைகளாகத் திகழ்கின்றன.

அவற்றில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகள், ஆசியான் நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நடைமுறை முதலீட்டுத் தொகை, 2020ஆம் ஆண்டைக் காட்டிலும் முறையே 54.1 விழுக்காடு, 56 விழுக்காடு மற்றும் 16.8 விழுக்காடு அதிகமாகும்.