ஆப்கானுக்குச் சீனாவின் தடுப்பூசி உதவி
2021-06-13 16:51:28

ஆப்கானிஸ்தானுக்கான சீனாவின் கரோனா தடுப்பூசி உதவியைப் பெற்றுக்கொள்ளும் வகையில் 12ஆம் நாள் அந்நாட்டின் அரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பு விழா ஒன்று நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் அரசுத் தலைவர் அஸ்ரப் கானி, பொதுச் சுகாதார அமைச்சர் மச்சிலு, ஆப்கானுக்கான சீனத் தூதர் வாங் யூ இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இதில் கானி உரை நிகழ்த்துகையில், சிக்கலான நேரத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் முக்கிய அண்டை நாடான சீனாவுடனான நட்புறவை மேலும் பேணிமதிப்பதாகத் தெரிவித்தார்.

வாங் யூ கூறுகையில், சுகாதாரம் மற்றும் உடல் நலத் துறையில் மனித குலத்தின் பொது எதிர்காலம் என்ற கருத்தைச் சீனா எப்போதும் கடைபிடித்து வருகின்றது. பல்வேறு நாடுகளுடன் இணைந்து நோய் தடுப்புக்கான பன்னாட்டு ஒத்துழைப்புக்குத் தனது அறிவுத்திறமையையும் ஆற்றலையும் வழங்கச் சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.