ஏழு நாடுகள் குழுவின் வாக்குறுதி
2021-06-14 16:41:58

பிரிட்டனின் கார்ன்வால் நகரில் 3 நாட்கள் நடைபெற்ற ஏழு நாடுகள் குழு உச்சிமாநாடு 13ஆம் நாள் நிறைவடைந்தது. 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள், உலகத்துக்கு 100 கோடி கரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்குவது இந்த உச்சிமாநாட்டுக்குப் பிறகு, இக்குழு வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஏழு நாடுகள் குழுவின் வாக்குறுதி தாமதமாகவும், போதுமற்றதாகவும் உள்ளது என்று ஐநா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரேஸ், பிரிட்டனின் முன்னாள் தலைமையமைச்சர் கார்டன் பிரெனன் முதலியோரும் சர்வதேச அரசியல் தலைவர்களும் நிறுவனங்களின் பொறுப்பாளர்களும் சுட்டிக்காட்டினர்.

இதுவரை, புதிய ரக கரோனா வைரஸ் தடுப்பூசிகளில் 44 விழுக்காடு பணக்கார நாடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், 0.4 விழுக்காட்டு மட்டுமே ஏழமை நாடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.