வெளிநாடுகளுக்கு அதிக ட்சுங்சி ஏற்றுமதி
2021-06-14 17:03:58

ட்சுங்சி என்பது பாரம்பரிய துவான்வூ திருவிழாவில் சீன மக்கள் உண்ணும் ஒரு சிறப்பு உணவாகும்.

வெளிநாடுகளுக்கு அதிக ட்சுங்சி ஏற்றுமதி_fororder_0614zzzziiii.JPG

இவ்விழாவின் போது மக்கள் தாவர இலை மூலம் பசை அரிசி, சிவப்பு அவரை, பேரிச்ச பழம், மட்டையின் மஞ்சள் பகுதி உள்ளிட்ட பல்வேறு உணவுகளை உள்ளடக்கிய ட்சுங்சி உணவைத் தயாரிக்கின்றனர்.

சீனாவின் சேச்சியாங் மாநிலத்தின் ச்சியாசிங் பிரதேசத்தில் தயாரிக்கும் ட்சுங்சி உலகளவில் புகழ்பெற்றது. இவ்வாண்டு இங்கு தயாரிக்கப்பட்ட 177.94 டன் எடையுள்ள ட்சுங்சி அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

வெளிநாடுகளுக்கு அதிக ட்சுங்சி ஏற்றுமதி_fororder_0614rBABCmDGn7uABZdXAAAAAAAAAAA945.800x508

ட்சுங்சி உண்ணுவதைத் தவிர,  இந்தத் திருவிழாவில் டிராகன் கப்பல் போட்டி நடத்துவது, வீட்டுக் கதவில் மூலிகைகளை தொங்கவிடுவது,  குழந்தைகள் மூலிகை மருந்து நிறைந்த நறுமணமுள்ள பைகளை தூக்கிக் கொள்வது போன்ற வழக்கங்களும் மக்களிடையே உள்ளன.