தென் கொரிய-ஜப்பான் தலைவர்கள் பேச்சுவார்த்தையை ஜப்பான் ஒரு சார்பில் நீக்கியது
2021-06-14 16:46:24

11முதல் 13ஆம் நாள் வரையான 7 நாடுகள் குழுத் தலைவர்களின் உச்சிமாநாடு நடைபெற்ற போது தென் கொரிய-ஜப்பான் தலைவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்த இரு நாட்டு வெளியுறவு அமைச்சகம் உடன்படிக்கையை எட்டியிருந்தன. ஆனால் ஜப்பான் ஒரு சார்பில் இதை நீக்கியது என்று தென் கொரிய வெளியுறவு அமைச்சகம் கூறியதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

தென் கொரியா எப்போதும் திறந்த மனப்பான்மையைக் கொண்டுள்ளது. ஜப்பானிய தரப்பு ஆக்கப்பூர்வமான மனப்பான்மையுடன் தென் கொரியாவுடன் உரையாடும் என்று எதிர்பார்த்திருந்தது. ஆனால், ஆண்டுதோறும் இரண்டு முறை நடைபெறும் தென் கொரியாவின் தென் கடல் தற்காப்புப் பயிற்சியைக் காரணமாக கூறி ஜப்பான் இப்பேச்சுவார்த்தையை நீக்கியுள்ளது. இதற்கு தென் கொரிய வெளியுறவு அமைச்சகம் வருத்தம் தெரிவித்துள்ளது.