பொதுச் செழிப்பைக் கொண்டு வரும் சேஜியாங்
2021-06-14 19:10:19

பொதுச் செழிப்பைக் கொண்டு வரும் சேஜியாங்_fororder_0614微信图片_20210614190802

சீனாவின் அழகான நகரங்களுள் முன்னணியில் இருப்பது தென்கிழக்கில் அமைந்துள்ள கவர்ந்திழுக்கும் நகரான சேஜியாங். பொருளாதார ரீதியில் ஏற்கெனவே வலுவாக உள்ள இந்நகர், தற்போது சீன மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள நகராக மாறியுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவும், அரசவையும் கடந்த 10ஆம் நாள் வெளியிட்ட சேஜியாங்கில் ஒரு பொதுவான செழிப்புமிகு மண்டலத்தை கட்டியமைப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் ஆவணம் ஒன்றை வெளியிட்டதுதான் அதற்குக் காரணமாகும்.

1970களின் பிற்பகுதியிலும் 1980களின் தொடக்கத்திலும், சீனா முதலில் ஷென்ஜென், ஜுஹய், ஷான்டூ மற்றும் சியாமென் ஆகிய இடங்களில் நான்கு சிறப்பு பொருளாதார மண்டலங்களை நிறுவி, நாடு முழுவதும் சீர்திருத்தம் மற்றும் திறப்புக்கான வழியை ஆராய்ந்தது. தற்போது, தொழில்துறைகளில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ள ஷென்ஜென் உலக அளவில் முன்னோடி நகரங்களுள் ஒன்றாக மாறியுள்ளது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போல, சேஜியாங்கில் பொது செழிப்பு என்ற கருத்தாக்கம் கொண்ட மண்டலம் ஒன்றைக் கட்டியமைக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது. இது, சீனாவின் எதிர்கால வளர்ச்சிக்கு உரிய திசையையும் வழியையும் காட்டும் என உறுதியாக நம்பப்படுகிறது.

"பொது செழிப்பு" என்பது சீனாவின் சோசலிச கட்டுமானத்தில் இன்றியமையாத தேவையாக உள்ளது. அத்துடன், பண்டைக் காலத்திலிருந்து மக்களின் அடிப்படை இலட்சியமாகவும் இருந்து வருகிறது. சமத்துவமின்மை, வறுமை, அசௌகரியங்கள் ஆகியவை கூடாது என்று சீனாவின் தொன்மையான கவிஞர் கன்ஃபியூசியஸ் நல்கிச் சென்றுள்ளார். அக்கருத்துக்கு ஏற்ப பொது செழிப்பு என்ற மண்டலத்தைக் கட்டியமைக்க ஆளும் அரசு திட்டமிட்டுள்ளது.

1970களின் பிற்பகுதியில் சீனாவில் சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால், கடந்த 40 ஆண்டுகளில் பல அளப்பறிய முன்னேற்றங்களை மக்களும் அரசும் கண்டுள்ளது. பல்வேறு உலக நாடுகளில் நிலவி வரும் உள்நாட்டுப் பிரச்னைகளுக்கு சமத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றில் காண்பிக்கப்படும் பாரபட்சமே காரணமாக உள்ளது. “தொடர்ச்சியான வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தின் மூலம் சமூகத்தில் சமத்துவத்தையும் நீதியையும் நிலைநாட்ட முடியும்,” என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2014இல் சுட்டிக்காட்டினார். மக்களின் வாழ்க்கைத் தரத்தை பன்முக அளவிலும் முன்னேற்ற வேண்டும் என்பதற்காக, சீன அரசு தொடர்ச்சியாக பல வளர்ச்சி சார் கொள்கைகளை வகுத்து வருகிறது.

மனித குல பொது எதிர்கால சமூகம் என்பது சீனாவால் தற்போது அடிக்கடி கூறப்படும் வாசகமாக உள்ளது. பொது செழிப்பை எட்டுவதற்காக அமைக்கப்படும் ஒரு மண்டலத்தை சேஜியாங்கில் அமைக்கப்படுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. தேசிய அளவில் தனிநபர் வருமானம் அதிகம் கொண்ட நகரங்களில் சேஜியாங் முன்னணியில் உள்ளது. அத்துடன், கடந்த பல ஆண்டுகளாக பகிர்வுப் பொருளாதாரம், எண்மயப் பொருளாதாரம் ஆகியவற்றை வேகமாக முன்னெடுத்து வருகிறது; சந்தைப்படுத்துதல் தீவிரமாக உள்ளது. மேலும், முன்னதாக தேசிய அளவில் பல்வேறு சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கு சேஜியாங் நகர் முன்னோடியாக செயல்பட்டுள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.