ரஷிய அரசுக் கடன் மீதான அமெரிக்காவின் தடை நடவடிக்கை 14ஆம் நாள் துவக்கம்
2021-06-14 16:40:14

அமெரிக்க நிறுவனங்கள் ரூபிள் மூலம் விலை குறிக்கப்பட்ட ரஷியாவின் அரசுக் கடனை வாங்குவதைத் தடுக்கும் அமெரிக்காவின் தடை நடவடிக்கை 14ஆம் நாள் துவங்கியது என்று  ரஷிய செய்தி நிறுவனம் அறிவித்தது. இவ்வாண்டின் ஏப்ரல் மாதம் ரஷியா மீதான புதிய தடை நடவடிக்கைகளை அமெரிக்கா அறிவித்தது. ரஷியாவின் ஆரம்ப தேசியக் கடனை வாங்குவதைத் தடுப்பது அவற்றில் ஒன்றாகும்.

வரும் 16ஆம் நாள் ரஷிய நிதித் துறை அமைச்சகம் முறையே 50லட்சம் கோடி ரூபிள் மதிப்புள்ள மூன்று அரசுக் கடன் பத்திரங்களை வெளியிடவுள்ளது.

இது குறித்து ரஷிய நிதித் துறை அமைச்சர் சில்வானோவ் கூறுகையில், அமெரிக்காவின் தடை நடவடிக்கை ரஷியாவின் அரசுக் கடன் வெளியீட்டை பாதிக்காது. அது அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டுமே இழப்பை ஏற்படுத்தும் என்றார்.