புதிய இஸ்ரேல் தலைமையமைச்சர்
2021-06-14 16:54:28

இஸ்ரேலில் புதிய அரசு 13 ஆம் நாளிரவு பதவியேற்றது. ஐக்கிய வலது சாரிக் கூட்டணியின் தலைவரான நப்தாலி பென்னட் தலைமையமைச்சராகப் பதவி ஏற்றார்.

புதிய அரசில் 8 அரசியல் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இஸ்ரேலின் வரலாற்றில் அரபு அரசியல் கட்சியை உள்டைக்கிய முதல் அரசு இதுவாகும்.

மக்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கவும், அரசின் பல்வேறு செல்பாடுகள் இயல்பான நிலைக்குத் திரும்ப செய்யவும் பாடுபடும் என்று புதிய அரசின் முதல் கூட்டத்தில் பென்னட் 13ஆம் நாளிரவு தெரிவித்தார். பல்வகை சித்தாந்தங்களைக் கொண்ட இந்த அரசு வெற்றி பெறும் விதம் பாடுபடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.