துவான்வூ திருவிவாவில் சீன மக்களின் சுற்றுலா பேரூக்கம்
2021-06-15 15:25:00

இவ்வாண்டு துவான்வூ திருவிழா விடுமுறையில், சீன மக்கள் அதிகமானோர் ஊக்கத்துடன் சுற்றுலா மேற்கொண்டனர். சீனப் பண்பாடு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் தரவு மையத்தின் புள்ளிவிவரங்களின்படி, இத்திருவிழா விடுமுறை நாட்களில், மொத்தம் 8 கோடியே 91 லட்சத்து 36 ஆயிரம் மக்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 94.1 விழுக்காடு அதிகம். இதன் மூலம் கிடைத்த சுற்றுலா வருமானம், 2943 கோடி யுவானை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 139.7 விழுக்காடு அதிகரித்துள்ளது.