ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பங்குகள்
2021-06-15 15:13:12

ஜுன் 15ஆம் நாள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்ட 20ஆம் ஆண்டு நிறைவு நாளாகும். கடந்த 20 ஆண்டுகளில், சர்வதேச உறவில் செல்வாக்கு மிக்க அமைப்புகளில் ஒன்றாக இது திகழ்ந்து வருகிறது. பிரதேச பாதுகாப்பு மற்றும் நிதானத்தைப் பேணிகாப்பதற்கான முக்கிய சக்தியாக இது மாறியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில், ஒன்றுக்கொன்று நம்பிக்கையும், நலனும் அளிப்பது, சமத்துவம், கலந்தாய்வு, பலதரப்பட்ட நாகரிகத்துக்கு மதிப்பளிப்பது, கூட்டு வளர்ச்சியை நாடுவது என்ற ஷாங்காய் எழுச்சி, சர்வதேச சர்ச்சையைத் தீர்ப்பது, அரசு சாரா தூதாண்மை மற்றும் பரிமாற்றத்தை முன்னேற்றுவது ஆகிய துறைகளில் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. பல்லாண்டுகளின் வளர்ச்சி மூலம் இவ்வமைப்பில் 8 நாடுகள் சேர்ந்துள்ளன. தவிர, 4 பார்வையாளர் நாடுகளையும், 6 பேச்சுவார்த்தை கூட்டாளி நாடுகளையும் இது கொண்டுள்ளது.

இந்தியா சர்வதேச சிந்தனைக் கிடங்கு சீன ஆய்வு மையத்தின் தலைவர் பிரசூன் ஷர்மா கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாபெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பில் இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் ஒத்துழைப்பு மேற்கொண்டு வருகின்றன. தவிர, ஐரோப்பிய ஆசியக் கண்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பை இவ்வமைப்பு விரைவுபடுத்தியுள்ளது. குறிப்பாக சீனாவின் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின்படி, பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.